Wednesday, June 15, 2011

[கனடா தமிழ் Canada Tamil] Re: கங்கை நதியை காப்பாற்றுமாறு 73 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தவர் மரணம்

எனது  அழ்ந்த  வருத்தங்கள்  .... 

நல்ல  மனிதனை இந்த பூவுலகம் இழந்ததை எண்ணி வருத்துகிறேன் ...
 
 
2011/6/14 தங்கசிவராஜ் <thangasivaraj@gmail.com>
செவ்வாய்க்கிழமை, 14, ஜூன் 2011 (16:46 IST)
கங்கை நதியை காப்பாற்றுமாறு 73 நாட்கள்
உண்ணாவிரதம் இருந்தவர் மரணம்

sw.jpg

சட்டவிரோத சுரங்கத் தொழிலில் இருந்து கங்கை நதியை காப்பாற்றுமாறு 73 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுவாமி நிகாமானந்த் உயிரிழந்துவிட்டார்.

கறுப்புப் பணத்தை மீட்கக் கோரி உண்ணாவிரதம் இருந்து டேராடூன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 9 நாட்களில் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் யோகா குரு பாபா ராம்தேவ். அவரை அமைச்சர்கள், அரசியல்வாதிகள் என பலரும் சந்தித்ததால் அவரது உண்ணாவிரதம் இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது.

ஆனால் கங்கை நதியை காப்பாற்றுமாறு உண்ணாவிரதம் இருந்த நிகாமானந்த் டேராடூனில் பாபா ராம்தேவ் அனுமதிக்கப்பட்டிருந்த அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கங்கை நதி மாசுபடுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹரித்வாரில் நிகாமானந்த் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.
 
73 நாட்கள் உண்ணாவிரதத்துக்குப் பிறகு மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார். நிகாமானந்தின் உடல் மருத்துவமனை மார்ச்சுவரியில் இருந்து இன்று காலை கொண்டுசெல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நட்புடன்,,

தங்க சிவராஜ்
  9944155544





--
Bharathi T

--
You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
To unsubscribe from this group, send email to canadatamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/canadatamil?hl=ta.

No comments:

Post a Comment