Wednesday, June 8, 2011

[கனடா தமிழ் Canada Tamil] Fwd: [பண்புடன்] விமான டிக்கெட்... வில்லங்க எஸ்.எம்.எஸ்...



---------- Forwarded message ----------
From: ஸ் பெ <stalinfelix2000@gmail.com>
Date: 2011/6/8
Subject: [பண்புடன்] விமான டிக்கெட்... வில்லங்க எஸ்.எம்.எஸ்...
To: panbudan <panbudan@googlegroups.com>



விறுவிறு விஜயலட்சுமி
FOLLOW - UP

''நான், 'சூர்ய வம்சம்' என்ற டி.வி. சீரிய​லில் நடித்து வரு​கி​றேன். கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக இயக்குநர் ரமேஷ் என்னைத் திருமணம் செய்துகொள்ளச் சொல்லி வற்புறுத்துகிறார். இதனால் மனவேதனையில் ரிஸ்டைல் என்ற தூக்க மாத்திரைகளை விழுங்கிச் சாக முயன்றேன். என்னை சித்ரவதைப்படுத்திய ரமேஷ் மீது நடவடிக்கை எடுங்கள்!'' 

- விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் விஜயலட்சுமியின் புகார்.

''உடல் சோர்வின் காரணமாகவும் மன அழுத்தத்தைக் குறைக்கவுமே தூக்க மாத்திரைகளை உட்கொண்டதாக சாட்சிகள் தெரிவிக்கின்றன. விஜயலட்சுமி தற்கொலைக்கு முயன்றார் என்பது சாட்சிகளின் மூலம் நிரூபிக்கப்படவில்லை. அதனால், குற்றம் சாட்டப்பட்டவரை விடுவித்து தீர்ப்பு அளிக்கிறேன்!''

- சைதாப்பேட்டை 9-வது பெருநகரக் குற்றவியல் நடுவர் மன்றத் தீர்ப்பு.

சீமான் மீது பரபரப்பு புகார் கூறிய விஜயலட்சுமியின் பழைய வழக்கும் அதன் தீர்ப்பும்தான் இது! இதேபோல், இன்னும் பல சம்பவங்களைப் பட்டியல் போடுகிறார்கள் சினிமா வட்டாரத்தினர்.

''தயாரிப்பாளர் ஞானவேல், 'பூந்தோட்டம்' என்கிற படத்தில்தான் விஜயலட்சுமியை அறிமுகப்​படுத்தினார். அப்போது விஜயலட்சுமி, மகாலிங்கபுரம் பிரவுன் ஸ்டோன் அபார்ட்மென்டில் தங்கவைக்கப்​பட்டார். விஜயலட்சுமி வீட்டுக்கு வந்து செல்லும் விருந்தினர்கள் பிரச்னையால்,  ஒரு கட்டத்தில் அபார்ட்மென்ட்வாசிகள் அனைவரும் சேர்ந்து அவரை அங்கே இருந்து வெளியேற்றினர்.

அடுத்து, செல்லத்துரை என்கிற சினிமா தயாரிப்பு நிர்வாகி மோசடி செய்துவிட்டதாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் விஜயலட்சுமி புகார் செய்தார். சமீபத்தில் விஜயலட்சுமிக்கும் ஒரு நல்ல கேரக்டர் கொடுத்து, ஹிட் படம் எடுத்த இளம் இயக்குநருடனும் சிக்கல் வெடித்தது. பணம் கொடுத்தே, அந்தப் பிரச்னை தீர்க்கப்பட்டது!'' என்கிறார்கள்.

புகார் கொடுத்த கையோடு மீடியாக்களுக்கு முகம் காட்டாமல் வீட்டில் முடங்கிவிட்ட விஜயலட்சுமி, போலீஸிடம் சில ஆதாரங்களைச் சொல்லி இருக்கிறாராம். சீமானுடன் ஒன்றாகப் பயணித்த விமான டிக்கெட்டுகள், சில எஸ்.எம்.எஸ்-கள், மதுரையில் உள்ள ஒரு ஹோட்டல் ரசீது என விஜயலட்சுமி சமர்ப்பித்த ஆதாரங்களைப் பார்த்து கிறுகிறுத்துக்கிடக்கிறது போலீஸ். காரணம், மதுரையில் ஒன்றாகத் தங்கியதாக விஜயலட்சுமி குறிப்பிடும் நாளில் சீமான் சென்னையில் பொதுக் கூட்டம் நடத்தி இருக்கிறாராம். போலீஸ் தரப்பிலான சிலர், ''விஜயலட்சுமி சமர்ப்பித்த ஆதாரங்கள் போதுமானதாக இல்லை. அதனால்தான், சீமானிடம் இது குறித்து இன்னமும் விசாரிக்கவில்லை. தான் உதவி கேட்டபோது, சீமான் பணம் கொடுத்ததாக விஜயலட்சுமி சொல்கிறார். வங்கிக் கணக்கில் பணம் போடப்பட்ட ஆதாரங்களையும் காட்டுகிறார். ஆனால், பணம் உதவி செய்தமைக்கும் கற்பழிப்பு புகாருக்கும் என்ன சம்பந்தம்? அதனால், மேற்கொண்டு இந்த வழக்கில் எதையும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறோம்!'' என்கிறார்கள்.

இதற்கிடையில் சீமானுக்குப் பெண் பார்க்கும் படலம் தீவிரமாக நடக்கிறது. அநேகமாக, அகதி முகாமில் இருக்கும் பெண் ஒருவரை அவர் மணக்கக்கூடும்!

நன்றி
விகடன்


--

தோழமையுடன்

ஸ்டாலின் பெலிக்ஸ்

வரலாற்றுக்குள்ளே தேடு. அங்கே சிறைப்பட்டுக் கிடக்கும் உண்மைகளை விடுதலை செய்.
விடுதலை பெற்ற உண்மைகள் உன்னை விடுதலை செய்யும்.

-------------------------------------------------------------------------------------------------------------------------
----------------------------------------------------------------------------------------------

--
'மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர்'
கட்டற்ற சுதந்திரத்தோடு அளப்பரிய கருத்துப் பரிமாற்றங்களை நிகழ்த்தி இதயங்களால் இணைவோம் இணையத்தில் - பண்புடன்
 
பண்புடன் ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudanav@gmail.com
 
பண்புடன் இதழுக்கு உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி panbudan.padaippugal@gmail.com



--
Bharathi T

--
You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
To unsubscribe from this group, send email to canadatamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/canadatamil?hl=ta.

No comments:

Post a Comment