From: gopu <gopu.iyer@gmail.com>
Date: 2011/4/11
Subject: [muththamiz] கருணாநிதியும் அற்புத விளக்கும்.....
To: Tamil2Friends@googlegroups.com, muththamiz@googlegroups.com
கருணாநிதியும் அற்புத விளக்கும் -
(தமிழர்களே தமிழர்களே என்னை பூதத்திடம் விட்டாலும் அசர மாட்டேன் , பூதத்தை துரத்தியடித்து விளக்கோடுதான் வருவேன்...என்னை நம்பி ஆட்சியில் அமர வைக்கலாம்)
(சிறுகதை)
தமிழகத்தின் எதோ ஒரு கிராமத்தில் உள்ள நியாய விலை கடையில் இலவச அரிசி வாங்க மக்கள் வரிசையாக நின்று வாங்கி சென்ற வண்ணம் இருந்தனர். அதில் நின்றிருந்த ஒருவருக்கு அவருக்கு முன் நின்றிருந்தவரை அடையாளம் தெரியவில்லை. மிக நீண்ட வரிசையில் நீண்ட யோசனைக்கு பிறகு முன்னால் நின்றிருந்தவரிடம் நலம் விசாரித்தார்.
"உங்களை இதற்கு முன் இந்த ஊரில் பார்ததில்லையே! நீங்கள் எங்கிருக்கிறீர்கள்?" என்றார். அதற்கு முன்னே நின்றிருந்தவர் நான் 3-4 வருடமாக இந்த ஊரில் தான் இருந்தேன்" என்றார்.
என் பெயர் ஜீனி. அலாவுதின் கண்டெடுத்த விளக்கில் உள்ள பூதம் என்றார்.
ஜீனி சொன்னது...
அலாவுதினுக்கு பிறகு பலரிடம் விளக்கு கை மாறியது. ஒவ்வொருவரும் அவரவர் ஆசைகளை பூர்த்தி செய்துகொண்டனர், மகனுக்கு பாராளுமன்றத்தில் இடம், பெரிய பதவி, பணம் என்று…. கடைசியில் ஒருவருக்கு விளக்கு வந்து சேர்ந்தது கூடவே நானும் தான். அவர் விஞ்ஞானமுறையில் என்னிடம் கோரிக்கை வைத்தார். அதாவது விளக்கில் உள்ளே இருக்கும் அனைத்தும் தமக்கு வேண்டும் என்று… நானும் சம்மதித்து அதற்க்கு பரிசாக என்ன தருவீர்கள் என்றேன்.. அவரும் ஒரு பரிசு தருவதாக ஒத்துக்கொண்டார். பிறகு விளக்கில் உள்ளே உள்ள அணைத்து பணம் நகை பதவி அந்தஸ்து அனைத்தையும் கொடுத்தேன். எல்லா வற்றையும் கொடுத்தவுடன் எனக்கு உள்ள (அதிசய) சக்தியும் போய்விட்டது. இதை புரிந்து கொண்ட அவர் , என்னை அவரை புகழ்ந்து பேச சொன்னார் பாடச் சொன்னார், நான் முடியாது என்ற காரனத்திற்காக ,குடும்பத்துடன் என்னை விளக்கிலிருந்து துரத்தியடித்து விட்டார் பரிசை மட்டும் விட்டு விட்டு. என்ன பரிசென்று திறந்து பார்த்தால் ரேசன் கடை அட்டை( அது ஒன்று தான் எனக்கு மிஞ்சியது). அதை வைத்து கொண்டுதான் 3-4 வருடமாக இலவச அரிசி வாங்கி சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன்- என்றார்.
பூததிற்கே இந்த நிலையென்றால்...
க்-குறிப்பு
- - விளக்கு தான் மக்கள் வரிப்பணம் என்று எந்த இடத்திலும் குறிக்கப்படவில்லை
- ஜீனி தான் மக்கள் என்று எந்த இடத்திலும் குறிக்கப்படவில்லை --முத்தமிழ் குழுமம்
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.
--



You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
To unsubscribe from this group, send email to canadatamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/canadatamil?hl=ta.
No comments:
Post a Comment