Thursday, June 3, 2010

Chennai IT : ஆன்மீக அன்பர்களுக்கு மட்டும் - இன்றைய பஞ்சாங்க குறிப்புகள் - Today's Almanac


In Tamil - பஞ்சாங்கம் - 04-06-2010


 

விக்ருதி வருஷம்,
வைகாசி மாஸம் - 21 தியதி,
உத்தராயணம்,
வஸந்த ரிது,
ஆங்கிலத் தேதி: 04-06-2010,
வெள்ளிக்கிழமை,
கிருஷ்ண(தேய்பிறை)
 ஸப்தமி மதியம் மணி 02.00 வரை பின் அஷ்டமி

ஸதயம் நக்ஷத்ரம்   இரவு மணி 02.51 வரை பின் பூரட்டாதி,
வைதிருதி யோகம் நாழி 05.43,
பவம் கரணம் நாழி 20.01,
சூரிய உதயம்: காலை மணி 6.03,
சூரிய அஸ்தமனம்: மாலை மணி 6.31
.

அஹஸ்: 31.11

ரிஷப லக்ன இருப்பு: நாழி 01.41 (காலை மணி 06.40 வரை)

 

இராகு காலம்: மதியம் 10.33 முதல் 12.03 வரை

எமகண்டம்: மாலை 03.03 முதல் 04.33 வரை


 

வியா o புத சூரி  சுக் கே
o

இன்றைய கிரஹநிலை

o
o செ
ரா o o சனி


 

In English - Almanac

Vigrhuthi Varusham

Vaikaasi Month 

Date - 21

Utharayanam,

Vasantha Rithu,

04rd June 2010,

Friday,

Krishna - Sapthami upto afternoon Time 02.00 after Ashtami

Sadhayam Nakshatram Till night time 02.51

Vaidridhi Yogam Till Nazhigai 05.43,

Bavam Karnam Till Nazhigai 20.01,

Sun Rise - Morning 06.03,

Sun Set - Evening 06.27

Ahasu - 31.11

Remainder Lagnam: Nazhigai 01.41 (Till 06.40 Am)

Rahu Kaalam: 10.33 Am to 12.03 Noon

Emagandam  : 03.03 Pm to 04.33 Pm

 

 

Ju o Mer  Sun  Ven Kethu
o

Planetery Position

o
o Mars
Raghu o o Sat
 


 

இன்றைய ஜோதிடக்குறிப்பு:

நிறைய பேர் பயப்படும் கேள்வி: செவ்வாய் தோஷம் என்றால் என்ன? அதற்குப் பரிகாரம் இருக்கிறதா?

இதைப் பற்றியே தனியாக ஒரு பதிவு போட வேண்டி வரும். சரி, உங்கள் ஜாதகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் "ல" என்றோ அல்லது "லக்னம்" என்றோ அல்லது "Asc" என்றோ[ஆங்கில ஜாதகங்கள் மட்டும்] போட்டுருக்கும், அதுதான் உங்களது லக்னம். அதிலிருந்து Clockwise ஆக எண்ணுங்கள், செவ்வாய் அமர்ந்திருக்கும் இடத்தை எண்ணுங்கள். எண்ணிவிட்டீர்களா? கிடைத்திருக்கும் விடை: 2, 4, 7, 8, 10, 12 ஆகிய விடை உங்களுக்கு கிடைத்தால் உங்களுக்கு செவ்வாய்தோஷம் இருக்கிறது என்று பொருள். ஆனால் கீழ்க்கண்ட நிலையில் ஏதாவது ஒரு Exception இருந்தால் உங்களுக்கு செவ்வாய் தோஷம் நிவர்த்தி உண்டு, நீங்கள் பரிகாரம் செய்ய வேண்டும் என்பதில்லை. [ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும்]

[1] நீங்கள் மேஷம், விருச்சிகம், மகரம், கடகம் ஆகிய லக்னங்களிலோ இராசியிலோ பிறந்தவர் என்றால் உங்களுக்கு தோஷம் கிடையாது.
 

[2] நீங்கள் மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நக்ஷத்திரங்களில் பிறந்தவர் என்றால் உங்களுக்கு தோஷம் கிடையாது.
 

[3] உங்கள் ஜாதகத்தில் லக்னத்தையோ, 7ம் இடத்தையோ, 8ம் இடத்தையோ[பெண்களுக்கு மட்டும்] குரு பார்த்தால் உங்களுக்கு தோஷம் கிடையாது.
 

[4] 7ம் இடம்,, 8ம் இடம்[பெண்களுக்கு மட்டும்] மேஷம், விருச்சிகம், மகரம், கடகம் ஆகிய லக்னங்களாக வந்தால் உங்களுக்கு தோஷம் கிடையாது.
 

[5] செவ்வாய் அமர்ந்த நக்ஷத்திரக்கால் : மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நக்ஷத்திரங்களில் என்றால் உங்களுக்கு தோஷம் கிடையாது.
 

இதே போல் 100க்கும் மேற்ப்பட்ட Exceptions உள்ளன. எனவே செவ்வாய் தோஷம் என்றால் பயப்பட வேண்டியதில்லை.

பரிகாரம்: தினமும் கந்தஷஷ்டி கவசம் பாராயணம் செய்தல்

 

[ ஒரு அன்பர் கேட்டிருந்தார்: "ஐயா தங்களிடம் ஜாதக ஆலோசனை பெற கட்டணம் எவ்வளவு?" என்று. நான் ஜாதகம் பார்ப்பதற்கும், பரிகாரங்கள் சொல்வதற்கும் கட்டணம் ஏதும் பெறுவதில்லை. நான் மட்டுமல்ல எங்களது பரம்பரையில் எங்களது தாத்தா காலத்திலிருந்தே இதுதான் நடைமுறை]

குறிப்பு:

[1] தங்களுடைய ஜோதிடம், ஆன்மீகம் சார்ந்த கேள்விகளை எனக்கு தனி மடலில் அனுப்பி வைக்கவும்.

[2] தாங்கள் பகுதியில் நடக்கும் ஆன்மீக நிகழ்ச்சிகள், விழாக்கள், கும்பாபிஷேகம் போன்ற நிகழ்ச்சிகள் பற்றிய விபரங்களை எனக்கு தனி மடலில் அனுப்புங்கள்.

[3] ஜோதிடம் சம்பந்தப்பட்ட மடல்கள் தங்கள் நண்பர்களுக்கும் போய் சேர்வதற்கு தங்களுடைய நண்பர்களின் இமெயில் முகவரிகளையும் எனக்கு அனுப்பலாம்.


--


அடியேன் தாஸன்
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்.

--
Chennai IT Guys. keep Rocking.
To post to this group, send email to Chennaiitguys@googlegroups.com
To unsubscribe from this group, send email to
Chennaiitguys+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.co.in/group/Chennaiitguys?hl=ta
 
Online Tamil writer: :http://Tamil2Friends.com/tamil
Website URL : http://Tamil2Friends.com

No comments:

Post a Comment