Tuesday, June 1, 2010

[கனடா தமிழ் Canada Tamil] இலங்கை திரைப்பட விழாவில் பங்கேற்கமாட்டேன் - நமீதா

இலங்கை திரைப்பட விழாவில் பங்கேற்கமாட்டேன் - நமீதா PDFக்கு மாற்றவும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…

 
on 31-05-2010 16:57  

Favoured : 1

Published in : திரையுலகம், திரைச்செய்திகள்

இலங்கையில் நடைபெறும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவின் தொடக்க விழாவில் சிறப்பு நடனமாட அழைக்கப்பட்ட நிலையில் நடிகை நமீதா தான் அவ்விழாவில் பங்கேற்பதில்லை என்று அறிவித்துள்ளார்.

Imageசென்னை, இலங்கையில் நடைபெறும் சர்வதேச இந்திய திரைப்பட விழாவின் தொடக்க விழாவில் சிறப்பு நடனமாட அழைக்கப்பட்ட நிலையில் நடிகை நமீதா தான் அவ்விழாவில் பங்கேற்பதில்லை என்று அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது :

இலங்கை திரைப்பட விழாவுக்காக சில தினங்களுக்கு முன்னர் என்னிடம் தொடர்பு கொண்டார்கள். விழாவில் நடனமாடுமாறு கேட்டுக் கொண்டனர். அதற்காக பெரும் தொகை தருவதாக கூறினர். இலங்கையில் நடைபெறும் அந்த விழா தொடர்பாக தமிழ் திரையுலகில் எதிர்ப்பு இருக்கும்போது என்னால் கலந்துகொள்ள முடியாது என்று தெரிவித்துவிட்டேன். திரையுலகில் எனக்கு வாழ்வு கொடுத்தது தமிழர்கள்தான். எனது புகழுக்கு காரணமும் அவர்களே. எனவே, என்னிடம் வேறு யாரும் அறிவுரை கூறும் முன்னர், நானே அந்த விழாவில் பங்குபெற முடியாது என்று பதில் கூறிவிட்டேன். வாழ வைத்த தமிழர்களுக்கு துரோகம் செய்ய விரும்பவில்லை. இவ்வாறு நமீதா கூறியுள்ளார்.

Last update : 31-05-2010 20:16


--
You received this message because you are subscribed to the Google Groups " Canada Tamil கனடா தமிழ்" group.
To post to this group, send email to canadatamil@googlegroups.com.
To unsubscribe from this group, send email to canadatamil+unsubscribe@googlegroups.com.
For more options, visit this group at http://groups.google.com/group/canadatamil?hl=ta.

No comments:

Post a Comment