Thursday, May 20, 2010

Chennai IT : கணினி : உங்கள் ப்ளாக் திறப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது ஏன்?

உங்கள் ப்ளாக் திறப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது ஏன்?

1
நீங்கள் வலைப்பதிவரா? நீங்கள் ஒரு வலைப்பக்கத்திற்கு சொந்தக்காரரா? அல்லது நீங்கள் வலைப்பக்கத்தை வடிவமைப்பவரா? 

ஒரு சில வலைப்பக்கங்கள் திறப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வதை நாம் பார்த்திருக்கலாம். அது நமது வலைப்பூவாக இருக்கிற பட்சத்தில், நமது நண்பர்களோ அல்லது வாசகர்களோ நம்மிடம் 'ஏன் உங்கள் வலைப்பக்கம் திறக்க அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது?' என கேட்கும் பொழுது, அது எதனால் என நாம் எப்படி அறிந்து கொள்வது?

நமது தளத்தில் உள்ள ஏதாவது விஜிட்டினாலோ அல்லது ஏதாவது ஒரு லிங்க், படம் அல்லது ஓட்டுப் பட்டை என ஏதோ ஒன்று லோட் ஆவதற்கு அதிக நேரம் எடுத்து கொள்கிறது.  இதை கூகிள் க்ரோம் உலாவியில் எப்படி கண்டறிவது என்று பார்க்கலாம். 

அந்த குறிப்பிட்ட வலைப்பக்கத்தை கூகிள் க்ரோம் உலாவியில் திறந்து கொள்ளுங்கள். பிறகு அந்த பக்கத்தில் வலது க்ளிக் செய்து, Context menu வில் Inspect element ஐ க்ளிக் செய்யுங்கள். 


இனி திறக்கும் Developer Tools விண்டோவில் Resources பொத்தானை க்ளிக் செய்யுங்கள்.



இப்பொழுது You need to enable resource tracking to use this panel என்பதில் Only enable for this session என்பதை தேர்வு செய்து Enable resource tracking பொத்தானை அழுத்துங்கள். 

அந்த வலைப்பக்கம் மறுபடியும் லோட் ஆகும். இப்பொழுது அந்த பக்கத்தில் உள்ள ஒவ்வொரு ஐட்டமும் லோட் ஆவதற்கு எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறது என்பதை எளிதாக அறிந்து கொள்ளலாம். 



http://suryakannan.blogspot.com/2010/05/blog-post_20.html?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+MyTamilTechBlog+%28%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE+%E0%AF%A7%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D%29
--
சுரேஷ் க ச
www.suresh7383.blogspot.com

நேற்று என்பது முடிந்து போனது... நாளை என்பது வெறும் கனவு. இன்று என்பதே இன்பமானது

ஆகையால், ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ச்சியாக கழிப்போம்... அடுத்தவரையும் மகிழ்விப்போம்..

--
Chennai IT Guys. keep Rocking.
To post to this group, send email to Chennaiitguys@googlegroups.com
To unsubscribe from this group, send email to
Chennaiitguys+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.co.in/group/Chennaiitguys?hl=ta
 
Online Tamil writter: :http://Tamil2Friends.com/tamil
Website URL : http://Tamil2Friends.com

No comments:

Post a Comment