Saturday, May 22, 2010

Chennai IT : நெருப்புநரியில் சேமித்த கடவு சொற்களை எக்ஸ்போர்ட் செய்ய..

நெருப்புநரியில் சேமித்த கடவு சொற்களை எக்ஸ்போர்ட் செய்ய..

0
நெருப்புநரி உலவியில், பல தளங்களில் கடவு சொற்களை கொடுத்து சேமித்து வைத்திருப்போம். உதாரணமாக தமிலிஷ், தமிழ்10, தட்ஸ்தமிழ் போன்ற தளங்களில், ஒவ்வொருமுறையும் லாகின் செய்வதை தவிர்க்கும் முகமாக, Remember Password   எனும் வசதியை உபயோகித்து சேமித்து வைப்பது வழக்கம்.

இப்படி நாம் சேமிக்கும் கடவு சொற்களை ஒரு வேளை நாம் மறந்து விட்டால், நெருப்பு நரி உலவியில்,

Tools சென்று Options கிளிக் செய்து அதில் Security டேபை கிளிக் செய்யுங்கள். இதில் Saved Passwords... என்ற பட்டனை கிளிக் செய்தால் போதும்.  (இது நம்மில் பலர் அறிந்த ஒன்று)





இப்படி சேமித்த கடவு சொற்களை எக்ஸ்செல் போன்ற மென் பொருட்களுக்கு எக்ஸ்போர்ட் செய்வது எப்படி?

இந்த பணியை செய்ய Password Exporter எனும் நெருப்புநரி உலவியின் நீட்சியை நாம் கணினியில் நிறுவ வேண்டும். கீழே உள்ள சுட்டியிலிருந்து இந்த நீட்சியை தரவிறக்கி பதிந்து கொள்ளுங்கள்.


இனி Tools மெனு சென்று, Add-ons ஐ கிளிக் செய்து அதில் Password Exporter பகுதிக்கு சென்று Optios ஐ கிளிக் செய்தால், Import/Export Passwords டயலாக் பாக்ஸ் வரும்.  



இதில் சென்று சேமித்த கடவு  சொற்களை இம்போர்ட் அல்லது எக்ஸ்போர்ட் செய்து கொள்ளலாம். (XML அல்லது  CSV கோப்பு வடிவத்தில் சேமிக்கலாம்.)



CSV (Comma Separated Values) ஆக சேமிப்பது நல்லது.

--
Chennai IT Guys. keep Rocking.
To post to this group, send email to Chennaiitguys@googlegroups.com
To unsubscribe from this group, send email to
Chennaiitguys+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.co.in/group/Chennaiitguys?hl=ta
 
Online Tamil writter: :http://Tamil2Friends.com/tamil
Website URL : http://Tamil2Friends.com

No comments:

Post a Comment