அன்னையர் தினம் . . .
ஒற்றை வார்த்தையே
ஒருகாலத்தில்
உச்சரித்து
சொல்ல தடுமாறி
உளறிய
என் நாக்கும்
இன்றைய நாட்களில்
தடித்தெழுந்து
வெளியே
தடுக்கி விழுந்து
தாறுமாறாய்
வெடித்து சிதறிய
வார்த்தைகளால்
உன்மனதை
சுக்குநூறாய்
உடைக்கின்ற வேளையிலும்
ஒற்றை சொல்கூட
உதிர்க்காமல்
ஊமையாகவே
இருந்துவிடுகிறாயே
உன் மௌனமும்
எனக்கான
மரண தண்டனைதான்..!
நான்
கோபப்பட்டு
கடுஞ் சொற்களை
தொடுத்து பேசியும்
கண்டதை யெல்லாம்
எடுத்து வீசியும்கூட
என்மீது
மட்டுமேன்
உனக்கான எதிர்ப்புகள்
துளிகூட இல்லையே..?
உன் துக்கம்
பலவற்றில்
நான்
பங்குகொள்ளவில்லையே
நீ கதறி அழுத
பல பொழுதுகளில்
நான் கண்டுகொள்ளவேயில்லையே
அப்படியிருக்க
நீ மட்டுமெப்படி
என் சிறு துளி
கண்ணீருக்கும்
படபடத்து
ஏன்
ஒப்பாரி வைக்கிறாய்..?
நான்
வெற்றிபெற்ற
வேளைகளில்
என்னை மட்டும்
காரணமாய் சொன்னாய்
நான் தோல்வியுற்ற
வேளைகளில்
வேறு யாரைவது
தேடிபிடித்து
அவர்கள்மீதல்லவா
பழிபோடுகிறாய்
ஏன் அம்மா..?
உன்னை
சிரிக்கவைக்க
நான்
எந்தொரு
சிறு முயற்சி கூட
எடுக்க வில்லையே
ஆனாலும்
நான் சந்தோசபட்டால்
உனக்கெப்படி
முகமலர்ந்த சிரிப்பு
முந்திக்கொண்டு
வந்துவிடுகிறது..?
ஊருக்கு வரும்போது
பார்ப்பவனெல்லாம்
உடம்பு ஏறிவிட்டதென்று
வினவியதை
கேட்டுவிட்டு
வீட்டுக்குள் உள்னுளைந்துடன்
இப்படி இளைத்துவிட்டாயேயென்ற
உன் வாய்மொழி கேட்டு
சற்று குழம்பிவிட்டு
நீயும் பொய் சொல்லுவாயோ
என்ற சிந்தனையில்
மூழ்கி போய்விடுகிறேன்
உன் பார்வையில் மட்டும்
என்னுடல்
தேய்பிறை போல்
தோன்றுவதன்
அர்த்தமென்ன
என் முழுநிலவாய்
நீ இருப்பதாலா...?
நீ
சாப்பிட்டாயா
என்று கேட்குமுன்னே
சீக்கிரம் வந்து
சாப்பிட சொல்லி
தொந்தரவு செய்கிறாயே
உனக்கு
பசியென்ற ஒன்றை
இறைவன்
கொடுக்கவில்லையா..?
நான் உண்டுவிட்டால்
உன்பசியும்
மறைந்துவிடுகிறது
உன் மனதும்
நிறைந்துவிடுகிறது
இது எந்தொரு
அறிவியலிலும்
இந்த உண்மை
நிரூபிக்கப்பட வில்லையே..!
உன் பாசம்
என்னவென்பதை
அறிந்தபோதும்
மழுங்கிப்போன
என் நெஞ்சம்
உன்னிடம் நேசத்தை
வெளிக்காட்ட தெரியாமல்
தொலைந்து கொண்டிருக்கிறதே..!
அம்மாவென்ற
ஒற்றை வார்த்தையில்
இவ்வுலகே உள்ளடங்கி
போய்விட்டதென்ற
இந்த உண்மையை
உணர்ந்துவிட்ட
இந்நேரத்தில்
உன்காலடிதொட்டு
தலைவணங்குகிறேன்
அம்மா..!
Watch this Vairamuthu poem on Mother:
http://www.youtube.com/watch?v=s3e4PO2rqLk&feature=player_embedded
--அன்புடன்
விமல்
--
Chennai IT Guys. keep Rocking.
To post to this group, send email to Chennaiitguys@googlegroups.com
To unsubscribe from this group, send email to
Chennaiitguys+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.co.in/group/Chennaiitguys?hl=ta
Online Tamil writter: :http://Tamil2Friends.com/tamil
Website URL : http://Tamil2Friends.com
No comments:
Post a Comment