Monday, May 31, 2010

Chennai IT : ஆன்மீக அன்பர்களுக்கு மட்டும் - இன்றைய பஞ்சாங்கம் - Today's Almanac




In Tamil - பஞ்சாங்கம் - 01-06-2010


 

 

விக்ருதி வருஷம்,
வைகாசி மாஸம் - 18 தியதி,
உத்தராயணம்,
வஸந்த ரிது,
ஆங்கிலத் தேதி: 01-06-2010,
செவ்வாய்கிழமை,
கிருஷ்ண(தேய்பிறை)  சதிர்த்தி காலை மணி 08.21 வரை பின் பஞ்சமி

உத்திராடம் நக்ஷத்ரம்   மாலை மணி 07.17 வரை பின் திருவோணம்,
சுப்ரம் யோகம் நாழி 01.38,
பாலவம் கரணம் நாழி 05.53,
தியாஜ்ஜியம் 44.13,
சூரிய உதயம்: காலை மணி 6.03,
சூரிய அஸ்தமனம்: மாலை மணி 6.31
.

அஹஸ்: 31.09

ரிஷப லக்ன இருப்பு: நாழி 02.08

 

இராகு காலம்: மாலை 03.03 முதல் 04.33 வரை

எமகண்டம்: காலை 09.03 முதல் 10.33 வரை


 

வியா o புத சூரி  சுக் கே
o

இன்றைய கிரஹநிலை

o
o செ
ரா o o சனி


சந்திராஷ்டமம்:

மிருகசீர்ஷம், புனர்பூசம், பூசம்

--

In English - Almanac

Vigrhuthi Varusham

Vaikaasi Month 

Date - 18

Utharayanam,

Vasantha Rithu,

1st June 2010,

Tuesday,

Krishna - Chaturthi upto morning Time 08.21 after Panchami

Uthiraadaam Nakshatram Till evening time 07.17

Subrum Yogam Till Nazhigai 01.38,

Baalavam Karnam Till Nazhigai 05.53,

Thiyajjiyam 44.13,

Sun Rise - Morning 06.03,

Sun Set - Evening 06.27

Ahasu - 31.09

Remainder Lagnam: Nazhigai 02.08

 

Rahu Kaalam: 03.03 Pm to 04.33 Pm

Emagandam  : 09.03 Am to 10.33 Am

 

Ju o Mer  Sun  Ven Kethu
o

Planetery Position

o
o Mars
Raghu o o Sat
 


 

இன்றைய ஜோதிடக்குறிப்பு:

நாம் இன்று அலசப் போவது மிக முக்கியமானதும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டியதுமான சில நக்ஷதிரங்கள் பற்றிய தவறான குறிப்புகள்:

கீழ்க்கண்ட சில நக்ஷத்திரங்கள் ஆகாதவை அந்த நக்ஷத்திரத்தில் பிறந்தவர்களை மணமுடிக்கக் கூடாது என்றும் முடித்தால் சில துர்பலன்கள் ஏற்படும் என்றும் நமது வழக்கில் உள்ளது. சில உதாரணங்களைக் கீழே தந்துள்ளேன்:

நக்ஷதிரங்கள்: உரோகினி, ஆயில்யம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், பூராடம்

உரோஹினி - தாய்மாமனுக்கு ஆகாது.

ஆயில்யம் - மாமனாருக்கு ஆகாது

சித்திரை - சித்திரை அப்பன் தெருவிலே

விசாகம் - குழந்தை பிறந்தால் கோவிலில் கொடுத்து வாங்க வேண்டும்

கேட்டை - கேட்டை ஜேஷ்டனுக்கு ஆகாது

மூலம் - மூலத்து மாமியார் மூலையிலே

பூராடம் - பூராடம் பெண் படபடப்பாள்

 

இதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டால் யாரிடமும் சரியான பதில் இல்லை.

உதாரணமாக,

ஒருவரது ஆண் ஜாதகத்தில் வாழ்க்கைத்துணையை பார்க்கும் இடம் - 7ம் இடம்.

ஒருவரது பெண் ஜாதகத்தில் வாழ்க்கைத்துணையை பார்க்கும் இடம் - 7ம் இடம் மற்றும் 8ம் இடம்.

இதை வைத்துதான் பலன் சொல்ல வேண்டும். ஆனால் சந்திரன் நின்ற நக்ஷத்திரத்தை இப்படி சொல்லக்கூடாது. மற்றும் லாஜிக்காக நினைத்துப் பார்த்தால் சந்திரன் மனம் சம்பந்தப்பட்டவர். சுக்கிரன் தான் களத்திரகாரகன் என அழைக்கப்படுபவர், Atleast சுக்ரன் நின்ற நக்ஷத்திரத்தை எடுத்து கொண்டாலும் பரவாயில்லை, ஆனால் சந்திரனை சொல்லியிருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து எத்தனையோ பேர் மூலம் நக்ஷத்திரத்தில் பிறந்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு மிக சிறப்பாக வாழ்கிறார்கள். அதில் ஒருவரது மாமனார் 80 வயதுக்கு மேல் வாழ்ந்து கொண்டிருக்கிறார். மேலும் ஒவ்வொரு மனிதருக்கும் தனித்தனியாக ஜாதகம் உள்ளது, அவர்களது பலனை மற்றவரது ஜாதகம் சொல்லாது[குறிப்பு: தந்தைதாய் ஜாதக பலனை பிள்ளைகள் ஜாதகம் மூலமும், கணவனது ஜாதக பலனை மனைவி ஜாதகம் மூலமும், சகோதரனின் ஜாதக பலனை சகோதர சகோதரிகளின் ஜாதகம் மூலமும் ஓரளவுதான் சொல்லமுடியுமே தவிர 100% பலன் சொல்ல இயலாது]. இந்தப் மூடப்பழக்கம் இப்போது ஆண்கள் ஜாதகத்திலும் நுழைந்து கொண்டுள்ளது. இது சரியானதல்ல. இதற்குண்டான ஆதாரங்களை அடுத்த பதிவில் சொல்கிறேன்.

 

[ ஒரு அன்பர் கேட்டிருந்தார்: "ஐயா தங்களிடம் ஜாதக ஆலோசனை பெற கட்டணம் எவ்வளவு?" என்று. நான் ஜாதகம் பார்ப்பதற்கும், பரிகாரங்கள் சொல்வதற்கும் கட்டணம் ஏதும் பெறுவதில்லை. நான் மட்டுமல்ல எங்களது பரம்பரையில் எங்களது தாத்தா காலத்திலிருந்தே இதுதான் நடைமுறை]

குறிப்பு:

[1] தங்களுடைய ஜோதிடம், ஆன்மீகம் சார்ந்த கேள்விகளை எனக்கு தனி மடலில் அனுப்பி வைக்கவும்.

[2] தாங்கள் பகுதியில் நடக்கும் ஆன்மீக நிகழ்ச்சிகள், விழாக்கள், கும்பாபிஷேகம் போன்ற நிகழ்ச்சிகள் பற்றிய விபரங்களை எனக்கு தனி மடலில் அனுப்புங்கள்.

[3] ஜோதிடம் சம்பந்தப்பட்ட மடல்கள் தங்கள் நண்பர்களுக்கும் போய் சேர்வதற்கு தங்களுடைய நண்பர்களின் இமெயில் முகவரிகளையும் எனக்கு அனுப்பலாம்.

 


--


அடியேன் தாஸன்
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்.

--
Chennai IT Guys. keep Rocking.
To post to this group, send email to Chennaiitguys@googlegroups.com
To unsubscribe from this group, send email to
Chennaiitguys+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.co.in/group/Chennaiitguys?hl=ta
 
Online Tamil writer: :http://Tamil2Friends.com/tamil
Website URL : http://Tamil2Friends.com

No comments:

Post a Comment