உங்கள் கணினி பிரச்சனைகளுக்கு இலவச Microsoft Fix it Center இல் தீர்வு
நமது கணினியில் உள்ள இயங்குதளத்தில் அவ்வப்பொழுது ஏதாவது பிரச்சனைகள் வருவது வாடிக்கைதான். கணினி திடீரென வேகம் குறைவது, தொங்குவது (அதாங்க Hang ஆவறது), ஆடியோ வராமலிருப்பது, மை கம்ப்யூட்டரில் ட்ரைவ்கள் காணாமல் போவது, எழுத்துருக்களை நிறுவமுடியாமல் போவது, இணைய உலாவி (Internet Explorer) இல் பிரச்சனை (கொடுக்கும் வலை முகவரி வேறு, திறக்கும் பக்கம் வேறு) என பல பிரச்சனைகள் வருவதுண்டு.
இது போன்ற பிரச்சனைகளை இனம் கண்டு கொள்வதற்கும், தீர்வு காண்பதற்கும் நிறைய அனுபவம் தேவைப்படுகிறது. ஒரு சராசரி கணினி பயனாளரால் இவற்றை சரி செய்ய இயலுமா? இயலும் என்கிறது Microsoft Fix it Center. மைக்ரோசாப்ட் நிறுவனம் பல வருடங்களாக சிறு சிறு பிரச்சனைகளுக்கு Fix it script களை தனது தளத்தில் வெளியிட்டு வந்தது. தற்பொழுது இவையனைத்தையும் உள்ளடக்கிய Microsoft Fix it Center (Beta) மென்பொருள் கருவியை வெளியிட்டுள்ளது. இது முற்றிலும் இலவசம் என்பது சிறப்பான விஷயம். (தரவிறக்கச் சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)
இந்த மென்பொருள் Windows XP, Vista & Windows 7 ஆகிய மூன்றிலும் பயன்படும்படி வடிவமைக்கப் பட்டுள்ளது.
இதனை தரவிறக்கி உங்கள் கணினியில் நிறுவும் பொழுது, ஒரு சில அத்தியாவசியமான கருவிகளை அதுவாகவே தரவிறக்கம் செய்து பதிந்து கொள்ளும்.
விண்டோஸ் எக்ஸ்பியில் .NET 2.0 நிறுவப் படாமல் இருந்தால் கீழே உள்ளது போன்ற செய்தி வரும், இதில் Yes பட்டனை க்ளிக் செய்து பதிந்து கொள்ளலாம்.
பிறகு இந்த wizard இல் வருகின்ற recommended செட்டிங்க்ஸ்களை பின்பற்றுங்கள். உங்களுக்கு Online கணக்கு வேண்டும் எனில் மைக்ரோசாப்ட் தளத்தில் உருவாக்கி கொள்ளலாம். Send information about this computer to Microsoft Fix it center online என கேட்கும் பொழுது No தேர்வு செய்வது நல்லது.
இனி Microsoft Fix it center இயங்கும் பொழுது உங்கள் கணினியில் உள்ள பிரச்சனைகள் பட்டியலிடப்படும். இவற்றில் முழு விவரம் அறிய அதற்கு நேரான detail பட்டனை க்ளிக் செய்து பார்க்கலாம்.
தேவையான பிரச்சனையை சரி செய்ய run பொத்தானை க்ளிக் செய்து சரி செய்யலாம். தற்பொழுது இது பீட்டா வடிவில் வெளியிடப்பட்டுள்ளதால் உங்கள் கணினியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யும் என எதிர்பார்க்க கூடாது. பெரும்பாலான பிரச்சனைகளுக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும் என நம்பலாம்.
http://suryakannan.blogspot.com/2010/05/microsoft-fix-it-center.html?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+MyTamilTechBlog+%28%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE+%E0%AF%A7%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D%29
--
சுரேஷ் க ச
www.suresh7383.blogspot.com
அனைவரும் கடவுளாக முயற்சிக்க வேண்டாம்... முதலில், நல்ல மனிதர்களாக முயற்சிப்போம்..
--
Chennai IT Guys. keep Rocking.
To post to this group, send email to Chennaiitguys@googlegroups.com
To unsubscribe from this group, send email to
Chennaiitguys+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.co.in/group/Chennaiitguys?hl=ta
Online Tamil writter: :http://Tamil2Friends.com/tamil
Website URL : http://Tamil2Friends.com
No comments:
Post a Comment