Tuesday, May 18, 2010

Chennai IT : கணினி : புரொகிராம் அப்டேட்; கவனம் தேவை

புரொகிராம் அப்டேட்; கவனம் தேவை

 

நாம் பயன்படுத்தும் பல புரோகிராம் தொகுப்புகள் அவ்வப்போது அப்டேட் செய்யப்படுகின்றன. ஏற்கனவே உள்ள குறைகள் நிவர்த்தி செய்யப்படுகின்றன; அல்லது புதிய வசதிகள் சேர்க்கப்பட்டு கிடைக்கின்றன. ஒரு சில புரோகிராம்களுக்கு மட்டுமே, இந்த மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, அறிவிப்புகள் தரப்படுகின்றன. எனவே முழுவதுமாக அப்டேட்டட் ஆக இருக்க விரும்பினால், நாம் தான் அந்த புரோகிராமின் இணைய தளம் சென்று அறிந்து அப்டேட் செய்திட வேண்டியுள்ளது.
இந்த அப்டேட் விஷயத்திலும் நாம் கவனமாக இருக்க வேண்டியுள்ளது. சில மால்வேர் புரோகிராம்கள், குயிக் டைம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், தண்டர்பேர்ட் போன்ற புரோகிராம்களின் பெயரைப் பயன்படுத்தி, அவற்றுக்கான அப்டேட்கள் உள்ளதாகவும், ஏன் நீங்கள் அவற்றை மேற்கொள்ளக் கூடாது எனவும் ஆன பாப் அப் விண்டோ செய்திகளைத் தருகின்றன. குறிப்பிட்ட புரோகிராம் தந்த நிறுவனத்தின் பெயர் மற்றும் இலச்சினைகளைப் பயன்படுத்தி, இந்த விண்டோ தரப்படுவதால், நாம் அவற்றை உண்மை என நம்பி, அங்கு தரப்பட்டுள்ள லிங்க்கில் கிளிக் செய்துவிடுவோம். சில நொடிகளில் கம்ப்யூட்டர் இயக்கம் முடக்கப்பட்டு கிராஷ் ஆகும். காரணம், லிங்க்கில் கிளிக் செய்தவுடன் வைரஸ் அல்லது வேறு மால்வேர் புரோகிராம்கள், நம் கம்ப்யூட்டரில் இறங்கி அதன் நாச வேலைகளைத் தொடங்குவதே ஆகும்.
இது போன்ற சூழ்நிலைகள் நமக்கு அவ்வப்போது அறிவிக்கப்படுவதால், 'நாம் அப்டேட் செய்திடவே வேண்டாம், உள்ளதே போதும்' என்று இருந்து விடுகிறோம். எனினும் அண்மைக் காலத்தில் அப்டேட் செய்யப்பட்ட சில பிரபலமான புரோகிராம்கள் குறித்து அறிய முடிந்தது. அவற்றை இங்கு காணலாம்.
1. யாஹூ! மெசஞ்சர் தன் புதிய பதிப்பான 10.0.0,1264 பதிப்பை சென்ற மே 8 அன்று வெளியிட்டுள்ளது. யாஹு தளத்திலும் http://dowload.yimg.com என்ற தளத்திலும் இதனைப் பெறலாம். பைல் அளவு 16.5 எம்.பி. அனைத்து விண்டோஸ் இயக்கத் தொகுப்புகளிலும் பயன்படுத்தலாம். இதில் உள்ள புதிய மற்றும் பழைய வசதிகள் குறித்து அறிய http://messenger. yahoo.com/features/ என்ற முகவரியில் உள்ள இணையப் பக்கத்தினைக் காணவும்.
2. Anti Trojan Elite 4.9.7: மால்வேர் புரோகிராம்களை நீக்க உதவும் இந்த புரோகிராம் சென்ற மே 8 அன்று அப்டேட் செய்யப்பட்டுள்ளது. http://www.removetrojan.com/ என்ற இணைய முகவரியில் உள்ள தளத்தில் இதனைக் கண்டு டவுண்லோட் அல்லது அப்டேட் செய்திடவும். இந்த புரோகிராம் நல்லதொரு பயர்வாலைத் தருவதுடன், மால்வேர் அல்லது கீ லாக்கர் போன்ற புரோகிராம்களைத் தொடக்கத்திலேயே கண்டறிந்து நீக்குகிறது. இந்த அப்டேட் மூலம், இந்த புரோகிராம் நீக்கக் கூடிய ட்ரோஜன் வைரஸ் மற்றும் மால்வேர் புரோகிராம்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
3. Avast Free Antivirus 5.0.545 : இந்த புரோகிராமினைப் பெரும்பாலானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இது அண்மையில் அப்டேட் செய்யப்பட்டுள்ளது. http://download69.avast.com  என்ற தளத்தில் இதனைப் பெறலாம். வைரஸ்களுக்கு எதிரான இலவச புரோகிராம் வரிசையில் முதலிடம் பெற்றுள்ள இந்த புரோகிராம் குறித்து இந்த பகுதியில் பலமுறை தகவல்கள் தரப்பட்டுள்ளன.

http://www.dinamalar.com/Supplementary/cmalar_detail.asp?news_id=1207


--
Chennai IT Guys. keep Rocking.
To post to this group, send email to Chennaiitguys@googlegroups.com
To unsubscribe from this group, send email to
Chennaiitguys+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.co.in/group/Chennaiitguys?hl=ta
 
Online Tamil writter: :http://Tamil2Friends.com/tamil
Website URL : http://Tamil2Friends.com

No comments:

Post a Comment