Tuesday, May 18, 2010

Chennai IT : கணினி : டிஜிட்டல் தடங்களை அழித்துவிடுங்கள்

டிஜிட்டல் தடங்களை அழித்துவிடுங்கள்

 

இணையத்தில் நாம் எப்போது உலா வந்தாலும், எங்காவது நம்முடைய தனிப்பட்ட தகவல் குறிப்புகளைப் பதிக்க வேண்டியுள்ளது. அவ்வாறு பதித்த குறிப்புகளை இன்டர்நெட் என்றும் மறப்பதில்லை. அப்படியானால், அவற்றை மற்றவர்கள் பார்த்து அறிந்திடும் வாய்ப்புகள் உண்டா? என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுகிறது. ஆம், நிச்சயமாய் அவற்றை எங்காவது பலர் அறியும் நிகழ்வுகள் ஏற்படலாம். அவற்றை நாம் நீக்க முடியாதா? திரும்பப் பெற முடியாதா? இந்த கேள்விகளுக்குப் பதில் முடியும் என்பதே. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
இன்டர்நெட் எப்போதும் தன்னிடம் வந்த தகவல்களை மறப்பதே இல்லை. மறைப்பதும் இல்லை.நாம் அளிக்கும் தகவல்களின் டிஜிட்டல் எதிரொலி எங்காவது கேட்டுக் கொண்டு தான் இருக்கும். சர்ச் இஞ்சின்கள், இணைய தளங்களூடே ஊர்ந்து சென்று இந்த தகவல்களைத் தேடி அறிந்து தருகின்றன. கிடைக்கும் கடைசி பிட் தகவல் வரை சேர்த்து, அவற்றை வரிசைப்படுத்தி தருகின்றன.
நாம் பல தளங்களில் நம்மைப் பற்றிய தகவல்களை அளிக்கிறோம். பல வேளைகளில் நாம் விரும்பாத தளங்களிலும், மீண்டும் காண மாட்டோம் என்று எண்ணும் தளங்களில் கூட இவற்றைத் தருகிறோம்.
நம் தகவல்கள் குறித்த பயனாளர் ஒப்பந்தம் (User Agreement and Privacy Statements)  அதிர்ஷ்டவசமாக, நமக்கு ஒரு மெல்லிய பாதுகாப்பு அளிக்கிறது. நம்முடைய பெர்சனல் தகவல்களைக் கொண்டு, ஒரு இணைய நிறுவனம் என்னவெல்லாம் செய்திடும் அல்லது செய்யாது என்று தெளிவாகத் தருகிறது.
பேஸ்புக் (Facebook) தளத்தில் 50 கோடி பேர் உறுப்பினர்களாக இருக்கின்றனர். ஏன், நீங்கள் கூட இருக்கலாம். ஆனால் அவர்கள் அளித்திடும் ஒப்பந்தக் குறிப்பினை எப்போதாவது முழுவதும் படித்திருக்கிறீர்களா? நிச்சயமாக இருக்காது. எனவே நீங்கள் அங்கு அளித்திட்ட உங்கள் பெர்சனல் தகவல்களை, பேஸ்புக், தான் நம்பிக்கை வைத்திடும் அல்லது வர்த்தக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள இன்னொருவரிடம் தரலாம் இல்லையா?
நீங்கள் எப்போதாவது உங்கள் பெயரினை கூகுள் சர்ச் இஞ்சினில் தந்து தேடியிருக்கிறீர்களா? இல்லை இதற்கென உள்ள தளங்கள் மூலம் தேடி, உங்களைப் பற்றிய தகவல்கள் எங்கெல்லாம் இருக்கின்றன என்று அறிந்திருக்கிறீர்களா? தேடிப் பார்க்கவும். அப்போது தான் உங்களைப் பற்றிய தகவல்கள் எங்கெல்லாம் உள்ளன என்று அறியவரும்.
முதலில் இதில் அடிப்படைக் கேள்வி ஒன்று எழுகிறது. நீங்கள் தரும் பெர்சனல் தகவல்களுக்கு உரிமை உள்ளவர் யார்? நீங்களா? அல்லது நீங்கள் பதிந்திடும் இணைய தள உரிமையாளரா? நாம் எந்த தளத்தில் நம்மைப் பற்றிய தகவல்களைப் பதிந்தாலும், அவை நம் விருப்பத்தின் பேரில் ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காகத் தரப்படுகின்றன. அவற்றை அந்த தளம் மற்றவர்களுக்குத் தரக்கூடாது. மேலும் நீங்கள் கொடுத்த தகவல்களை நீங்கள் எப்போது விரும்பினாலும், அந்த தளத்திலிருந்து நீக்கும் உரிமை உங்களுக்கு வேண்டும்.
எடுத்துக்காட்டாக, பேஸ்புக் உங்கள் தகவல்கள் குறித்து செயல்படும் விதம் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், நீங்கள் அதில் உள்ள அக்கவுண்ட்டை நீக்கலாம். ஆனால் உங்கள் பெர்சனல் தகவல்கள் அதன் தளத்தில் இருப்பதாகத்தான் பேஸ்புக் கூறுகிறது.
சில தளங்கள் நம்மைப் பற்றிய தகவல்களை அழிக்கும் வழிகளைக் காட்டுகின்றன. கூகுள் டேஷ் போர்டு (http://www.google.com/support/ accounts/bin/ answer.py?hl=en&answer=162744)  போன்ற டூல்கள் நம் பெர்சனல் தகவல்களை நீக்கும் வழிகளைக் காட்டுகின்றன.
ட்விட்டரில் (Twitter)  நீங்கள் பதித்த தகவல் அல்லது செய்திக் கோப்புகளை விரும்பினால் நீக்குவதற்கு வழி தரப்பட்டுள்ளது. உங்களின் முழு தொடர்புகளையும் நீக்கலாம். இதற்கு http://twitwipe.aalaap.com/login.php என்ற தளத்தில் டூல் தரப்பட்டுள்ளது.
நம்மைப் பற்றிய தகவல்களை யாரும் கண்டு அறிந்து கொள்ளக் கூடாது என விரும்பினால், நாம் முதலில் செய்திட வேண்டியது கூகுள் மூலம் நம்மைப் பற்றிய தகவல்கள் உள்ள தளங்களைக் கண்டறிவது. அடுத்து அந்த தளங்களின் தன்மை குறித்து அறிந்து, அந்த தளத்தின் உதவியுடன், அவை தரும் டூல்கள் வழியாகவே, தகவல்களை நீக்கலாம்.
இப்போது பிரவுசர்களில் நம்மைப் பற்றிய பதிவுகள் சேமிக்கப்படாமல் இருக்க, பிரவுசர்களிலேயே இதற்கான டூல்கள் தரப்பட்டுள்ளன.  In Private, Private Browsing  மற்றும் In Cognito ஆகியவை அந்த வழிகளைத் தரும் டூல்களே. அல்லது Proxy services, Anonymizer,   மற்றும் Hide my ஆகியவற்றைப் பயன்படுத்தலாம்.

--
சுரேஷ் க ச
www.suresh7383.blogspot.com

நேற்று என்பது முடிந்து போனது... நாளை என்பது வெறும் கனவு. இன்று என்பதே இன்பமானது

ஆகையால், ஒவ்வொரு நிமிடத்தையும் மகிழ்ச்சியாக கழிப்போம்... அடுத்தவரையும் மகிழ்விப்போம்..

--
Chennai IT Guys. keep Rocking.
To post to this group, send email to Chennaiitguys@googlegroups.com
To unsubscribe from this group, send email to
Chennaiitguys+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.co.in/group/Chennaiitguys?hl=ta
 
Online Tamil writter: :http://Tamil2Friends.com/tamil
Website URL : http://Tamil2Friends.com

No comments:

Post a Comment