Monday, May 17, 2010

Chennai IT : பங்ஷன் கீகள் - செயல்பாடு தொகுப்பு

கம்ப்யூட்டர் மலரில் பங்ஷன் கீகளின் செயல்பாடுகளுக்கான தொகுப்பு ஒன்றை முன்பு தந்திருந்தோம். இந்த கீகளின் பயன்பாட்டினைப் புதிய கோணத்தில் கீழே தருகிறோம். இங்கு அவை மற்ற கீகளுடன் இணைந்து என்ன மாதிரியான செயல்பாட்டினைத் தருகின்றன என்று விளக்கப்படுகிறது. கீழே தந்துள்ளவை அனைத்து புரோகிராம்களிலும், விளக்கப்பட்டுள்ளபடி செயல்படும் என எதிர்பார்க்க வேண்டாம். பெரும்பான்மையான கீ இணைப்புகள் ஒரே மாதிரியான செயல்பாட்டினை அனைத்து புரோகிராம்களிலும் தந்தாலும,

 

சில புரோகிராம்கள், வேறு வகையான செயல்பாடுகளைத் தரும்படி வடிவமைக்கப்பட்டிருக்கலாம். ஒரு சில செயல்பாடுகள் தற்போது தேவைப்படாமல் இருக்கலாம். எனவே கீகளை அழுத்தி, அவற்றினால் எந்த செயல்பாடும் இல்லாமல் போனால், தொடர்ந்து அவற்றை இயக்காமல் அடுத்த கீ தொகுப்புகளுக்குச் செல்லவும்.

F1

Shift + F1= எம்.எஸ். வேர்ட் டாகுமெண்ட்டில் இவற்றை அழுத்துகையில், டாகுமெண்ட்டின் பார்மட் விஷயங்கள் அனைத்தையும் ஒரு சிறிய விண்டோவில் காட்டும்.
ALT + F1 = அடுத்த பீல்டுக்குச் செல்ல
ALT + Shift + F1 = முந்தைய பீல்டுக்குச் செல்ல
CTRL + ALT + F1 = மைக்ரோசாப்ட் சிஸ்டம் குறித்த தகவல்களைக் காட்டும். இது விஸ்டாவில் செயல்படவில்லை.
CTRL + Shift + F1 = எழுத்துவகையினை மாற்று. இதுவும் விஸ்டாவில் செயல்படவில்லை.
F2
Shift + F2 = டெக்ஸ்ட்டை காப்பி செய்தல்
CTRL + F2 = பிரிண்ட் பிரிவியூ கட்டளை (MS Word)


ALT + Shift + F2 = சேவ் கட்டளை (MS Word)


CTRL + ALT + F2 = ஓப்பன் கட்டளை (MS Word)


F3


Shift + F3 = வேர்ட் தொகுப்பில் எழுத்துக்களின் கேஸ் எனப்படும் (பெரிய சிறிய எழுத்து) வகை மாற்றம்.
CTRL + F3 = இது இயக்கப்படும் புரோகிராமினைப் பொறுத்தது. எனவே இதனைப் பரிசோதிக்கும் முன் உங்கள் டாகுமெண்ட்டை சேவ் செய்து கொள்ளுங்கள்.
F4
Shift + F4 = தேடல் அல்லது ஒரு செயலுக்குச் செல்ல (Repeat a find or Go To action) (வேர்ட் தொகுப்பில்)
CTRL + F4 = ஆக்டிவாக இருக்கும் விண்டோவினை மூடும்.
Alt + F4 = ஆக்டிவாக இருக்கும் புரோகிராமினை மூடும். எந்த புரோகிராமும் இயக்கப்படவில்லை என்றால், கம்ப்யூட்டர் சிஸ்டம் டவுண் செய்யப்படும்.
F5
Shift + F5 = முன்பு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்குச் செல்ல (MS Word)


CTRL + F5 = எந்தக் கட்டுப்பாடும் இன்றி, இயங்கும் புரோகிராமினை புதிதாய்த் திறக்கும். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் எனில் இன்டர்நெட்டிலிருந்து மேம்படுத்தும். ALT + F5 = வேர்ட் புரோகிராம் விண்டோவினைச் சுருக்கும்.
CTRL + F5 = வேர்ட் புரோகிராம் விண்டோவினைச் சுருக்கும்.
F6
Shift + F6 = அந்த அந்த புரோகிராமில் வடிவமைத்தபடி. எனவே இதனைச் சோதித்துப் பார்க்கும் முன் பைலை சேவ் செய்திடவும்.
CTRL + F6 = ஒரு புரோகிராமிற்குள் திறக்கப்பட்ட விண்டோக்களின் ஊடே முன்னோக்கிச் செல்லும்.
CTRL + Shift + F6 = ஒரு புரோகிராமிற்குள் திறக்கப்பட்ட விண்டோக்களின் ஊடே பின்னோக்கிச் செல்லும்.
F7


Shift + F7 = வேர்ட் புரோகிராமில் தெசாரஸ் கட்டளையைச் செயல்படுத்தும்.


CTRL + F7 = அந்த அந்த புரோகிராமில் வடிவமைத்தபடி. எனவே இதனைச் சோதித்துப் பார்க்கும் முன் பைலை சேவ் செய்திடவும்.


CTRL + Shift + F7 = வேர்ட் டாகுமெண்ட்டில் லிங்க் மூலம் தொடர்புடைய தகவல்கள் அப்டேட் செய்யப்படும்.
ALT + F7 = அடுத்த எழுத்து அல்லது இலக்கணப் பிழையைக் காட்டும்.
F8


Shift + F8 = தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டைச் சுருக்கும்.
CTRL + F8 = புரோகிராம் வடிவமைப்பிற்கேற்ப செயல்படும். பொதுவாக ஒரு ப்ராஜக்ட் விண்டோவினை வேறு அளவில் அமைக்கும்.
Alt + F8 = வேர்டில் மேக்ரோ விண்டோவினைத் திறக்கும்.
F9 : குறிப்பு: இவை வேர்ட் தொகுப்பிற்கு மட்டும்)
Shift + F9 = பீல்ட் கோட் மற்றும் அதன் முடிவுஇவற்றிற்கிடையே மாறும்.
CTRL + F9 = ஒரு காலியான பீல்டை இடைச் செருகும்.
CTRL + Shift + F9 = பீல்டின் தொடர்பைத் துண்டிக்கும்.
ALT + F9 = அனைத்து பீல்டு கோட் மற்றும் அவற்றின் விளைவுகளுக்கிடையே மாறி மாறிச் செல்லும்.
F10 (குறிப்பு: இவை வேர்ட் தொகுப்பிற்கு மட்டும்)
Shift + F10 = = ஷார்ட் கட் மெனு காட்டும்.
CTRL + F10 = டாகுமெண்ட் விண்டோவின மேக்ஸிமைஸ் செய்திடும்.
CTRL + Shift + F10 = ரூலரை இயக்கும்.
ALT + F10 = புரோகிராம் விண்டோவினைப் பெரிதாக்கும்.
F11
Shift + F11 = முந்தைய பீல்டுக்குச் செல்லும். (வேர்ட்)
CTRL + F11 = பீல்டை லாக் செய்திடும்.
CTRL+ Shift+ F11 = லாக் செய்த பீல்டை திறக்கும்.
ALT + F11 = மைக்ரோசாப்ட் விசுவல் பேசிக் காட்டும்.
ALT + SHIFT + F11 = மைக்ரோசாப்ட் விசுவல் ஸ்டுடியோ கோட் காட்டும்.
F12


Shift + F12 = சேவ் கட்டளை தேர்ந்தெடுக்கப்படும்.
CTRL + F12 = ஓப்பன் கட்டளை விண்டோவினைக் காட்டும்.
CTRL+ Shift+ F12 = பிரிண்ட் கட்டளையைத் தேர்ந்தெடுக்கும்.
இங்கே தரப்பட்டிருப்பதற்கும் மேலாக, பங்ஷன் கீகள் வேறு கீகளுடன் இணைந்து சில செயல்பாடுகளைத் தரலாம்.போட்டோ ஷாப், பேஜ் மேக்கர் போன்ற அடோப் புரோகிராம்கள் அவற்றிற்கான சில கீ இணைப்புகளைக் கொண்டிருக்கலாம்.

--

சுரேஷ் க ச
www.suresh7383.blogspot.com

அனைவரும் கடவுளாக முயற்சிக்க வேண்டாம்... முதலில், நல்ல மனிதர்களாக முயற்சிப்போம்..


--
Chennai IT Guys. keep Rocking.
To post to this group, send email to Chennaiitguys@googlegroups.com
To unsubscribe from this group, send email to
Chennaiitguys+unsubscribe@googlegroups.com
For more options, visit this group at
http://groups.google.co.in/group/Chennaiitguys?hl=ta
 
Online Tamil writter: :http://Tamil2Friends.com/tamil
Website URL : http://Tamil2Friends.com

No comments:

Post a Comment